புதுச்சேரி

மணல் திருட்டு: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

DIN


புதுவை மாநிலம், சித்தேரி அணைக்கட்டிலிருந்து மணல் திருடி வந்ததாக 5 மாட்டு வண்டிகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பாகூர் அருகே சித்தேரி அணைக்கட்டிலிருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருடப்பட்டு வருவதாக பாகூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸார் அந்தப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது, இருளன்சந்தை அருகே மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளைத் தடுத்து நிறுத்தினர். இதில் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் தப்பிவிட, ஒருவர் மட்டுமே போலீஸாரிடம் சிக்கினார்.
விசாரணையில் அவர், குட்டியாங்குப்பம் பனங்காட்டு காலனியைச் சேர்ந்த ரகு (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார், மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, ரகுவை கைது செய்தனர். மற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT