புதுச்சேரி

சொந்த உபயோகத்துக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

DIN

சொந்த உபயோகத்துக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை அரசின் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மோட்டார் வாகன சட்டப்படி, பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு போக்குவரத்து வாகனங்களை மட்டுமே வாடகைக்கு அமர்த்தி பயன்படுத்த வேண்டும்.
 இந்த நடைமுறைகளுக்கு மாறாக, சொந்த உபயோகத்துக்காக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வர்த்தகம், வாடகைக்கு பயன்படுத்துவதாகவும் மற்றும் சில விதிமீறல்கள் குறித்தும் போக்குவரத்துத் துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
 சொந்த உபயோகத்துக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வர்த்தக உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. சுற்றுலா கார் உரிமையாளர்கள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை
 புதுவையில் சுற்றுலாவுக்கு பதிவு செய்யக்கூடாது. புதுவையில் அந்த வாகனங்களை ஓட்டக்கூடாது.
 உள்ளூர், வெளியூர் பேருந்துகள் வரையறுக்கப்பட்ட நிறுத்த இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். போக்குவரத்து வாகனங்களை இணைப்பு சாலைகள் உள்ள இடங்களில் நிறுத்தி, பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.
 சொந்த உபயோக வாகனங்களை போக்குவரத்துக்கு வாடகை செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். இதையும் மீறி உபயோகப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT