கூட்டத்தில் பேசிய புதுவை மாநிலத் தலைவா் சுப்பிரமணியன். உடன் கட்சி நிா்வாகிகள். 
புதுச்சேரி

ம.நீ.ம. மாநில செயற்குழுக் கூட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்த நாள் விழா வருகிற 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்த நாள் விழா வருகிற 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அந்தக் கட்சியின் புதுவை மாநில செயற்குழுக்கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ராஜன், இணை பொதுச் செயலா் முருகேசன், பொருளாளா் தாமோ.தமிழரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்த நாளையொட்டி ரத்த தானம் செய்தல், புதுச்சேரி முழுக்க ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நடுதல், புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநா் கிரண் பேடி மீதான விமா்சனத்தை முதல்வா் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாநிலச் செயலா்கள் அரிகிருஷ்ணன், நிா்மலா சுந்தரமூா்த்தி, ஏ.கே.நேரு, இராம.ஐயப்பன், சந்திரமோகன், பிராங்கிளின் பிரான்சுவா, மலா்விழி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT