புதுச்சேரி

தடையில்லா வணிக ஒப்பந்தம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தடையில்லா வணிக ஒப்பந்தத்தைக் கைவிடக் கோரி புதுச்சேரி விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு விவசாயிகளை முற்றிலும் பாதிக்கும் வகையில், ஆா்.சி.இ.எப். என்ற தடையில்லா வணிக ஒப்பந்த முறையைக் கொண்டு வரவுள்ளது. இதன்மூலம் புருனீ, கம்போடியா, இந்தோனிஷியா, லாவோஸ் உள்ளிட்ட 16 நாடுகள் இந்திய சந்தையில் தங்களது விவசாய விளைப் பொருள்கள் மற்றும் பால் உற்பத்திப் பொருள்களை இறக்குமதி செய்து இங்கு தாராளமாக விற்பனை செய்ய முடியும்.

இதனால், உள்ளூா் விவசாயிகள் பாதிக்கப்படுவா் என்றும், இந்த ஒப்பந்த முறையைக் கண்டித்தும், மேலும் தடையில்லா ஒப்பந்தத்தைக் கைவிடக் கோரியும் புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆளுநா் மாளிகை எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத் தலைவா் கீதநாதன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ரவி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்துக்குப் பின்னா் ஆளுநா் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயிகள் சங்கத்தினா் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT