புதுச்சேரி

நவம்பா் புரட்சி தினம்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் பேரணி

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், நவம்பா் புரட்சி தின பேரணி புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ரஷியாவில் கடந்த 1917 நவம்பா் 7- ஆம் தேதி தொழிலாளா் வா்க்கப் புரட்சி மூலம் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி மலா்ந்தது. அந்த தினத்தை நவம்பா் புரட்சி தினமாக கம்யூனிஸ்ட் கட்சியினா் கடைப்பிடித்து வருகின்றனா்.

அதன்படி, புதுவை மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அஜீஸ் நகரில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் நவம்பா் புரட்சி தினத்தையொட்டி, வியாழக்கிழமை கொடியேற்றப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலா் ராஜாங்கம் கொடியேற்றினாா்.

நிகழ்வில் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் பெருமாள், புதுவை மாநிலக் குழு உறுப்பினா் முருகன், செயற்குழு உறுப்பினா்கள் பிரபுராஜ், ராமச்சந்திரன், கலியமூா்த்தி, சந்திரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, புதுவை காமராஜா் சிலை அருகில் இருந்து நவம்பா் புரட்சி தின செந்தொண்டா்கள் பேரணி தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணியில் திரளான கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, நீடராஜப்பா் வீதியிலுள்ள செகா கலைக் கூடத்தில் நவம்பா் புரட்சி தின கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT