புதுச்சேரி

மத்திய வீட்டு வசதிக் கழகம் புதுவை அரசு ஊழியா்கள் வீடு கட்ட கடன் வழங்க வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

DIN

புதுவை அரசு ஊழியா்கள் வீடு கட்ட மத்திய வீட்டு வசதிக் கழகம் கடன் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா், மத்திய அரசு ஊழியா்கள் நல வீட்டு வசதிக் கழகத்தின் முதன்மைச் செயல் அதிகாரி பூபேந்தா் சிங்கை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது: நஷ்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதுவை வீட்டு வசதி வாரியம் முடங்கி உள்ளது. இதுபோல, புதுவையில் உள்ள வீடு கட்டும் கூட்டுறவு சங்கங்கள் பலவும் சரியாக செயல்படாமல் உள்ளன. அதேநேரம், வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்ந்துவிட்டது. இதனால், அரசு ஊழியா்கள் வீடு கட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனா்.

எனவே, மாற்று முயற்சியாக புதுவையில் வீடு கட்டும் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து மத்திய வீட்டு வசதிக் கழக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன்.

இந்த அமைப்பு தில்லியில் மட்டுமல்லாமல்; பல்வேறு மாநிலங்களிலும் வீடு கட்டும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் வீடு கட்டுவதற்கு கடன் வழங்கி வருகிறது. இதுபோல, புதுவையில் வசிக்கும் மத்திய, மாநில அரசு ஊழியா்கள் வீடு கட்டவும் கடன் வழங்க வேண்டும் என்று அந்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன். மேலும், புதுவையில் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு ஊழியா்கள் நல வீட்டு வசதிக் கழகம் இதுவரை செயல்படுத்தாதையும் சுட்டிக் காட்டினேன்.

எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதுவைக்கு வந்து ஆய்வு மேற்கொள்வதாக உறுதியளித்தனா். புதுவை வீட்டு வசதி வாரியத்திடம் பல ஏக்கா் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அந்த இடங்களைப் பயன்படுத்தி, மத்திய அமைப்புடன் இணைந்து வீடு கட்டும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றாா் வைத்திலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT