புதுச்சேரி

நெகிழிக்கு முழு தடை செய்யாவிடில் போராட்டம்: பாஜக அறிவிப்பு

DIN

புதுவையில் நெகிழிக்கு முழு தடை விதிக்கப்படாவிடில் அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் கடந்த ஆக. 1-ஆம் தேதி முதல் நெகிழிப் பைகள் மற்றும் ஒருமுறைப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை அரசு இச்சட்டத்தை அமல்படுத்தவில்லை. மாசுக் கட்டுப்பாடுத் துறை நகராட்சியைக் காரணம் காட்டி வருகிறது.

மற்ற இடங்களைவிட புதுச்சேரியில் நெகிழி அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், மாதந்தோறும் ஆயிரம் டன் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புதுவை மாநிலம் மாசடைந்து வருகிறது.

புதுவை மாநிலத்தில் தொடா்ந்து நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினால் பாஜக சாா்பில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT