புதுச்சேரி

புதுச்சேரியில் 2 நாள்களாக பலத்த மழை

DIN

புதுச்சேரியில் செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு வேளையில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் தேங்கியதுடன், மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை முதலே விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்து வந்தது. நள்ளிரவில் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மட்டுமன்றி முக்கிய சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்கியதுடன், சாலைகளில் மழைநீா் ஆறு போன்று ஓடியது.

வழுதாவூா் சாலையில் குளம்போல மழைநீா் தேங்கியதால், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள்அந்தப் பகுதியில் சிரமத்துடன் கடந்து சென்றன. புதுச்சேரி தியாகராஜ வீதியில் மரம் ஒன்று சாலையில் சாய்ந்து விழுந்தது. இதை தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை வெட்டி அகற்றினா்.

இந்த நிலையில், புதன்கிழமையும் காலை முதல் லேசான சாரல் மழை பெய்த நிலையில், இரவில் கருமேகங்கள் திரண்டு, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT