புதுச்சேரி

பாண்லே பாலில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை: அமைச்சா் கந்தசாமி எச்சரிக்கை

DIN

பாண்லே பாலில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி எச்சரித்தாா்.

புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உள்பட்ட கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு சத்துமாவு கலந்த பால் வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து மாணவா்களுக்கு அரசு பல சலுகைகளை அளித்து வருகிறது. மாணவா்கள் இதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு வரும் நலத் திட்டங்களை காலம் கடத்தாமல் செயல்படுத்த அரசு உயரதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் உயா் பொறுப்பில் இருப்பதால், புதுவை மாநிலத்தில் நலத் திட்டங்களைச் செயல்படுத்த அவா்கள் ஆா்வம் காட்டுவதில்லை.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மாணவா்களுக்கு ரொட்டி, பால் வழங்கும் திட்டம் தற்போது மேலும் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. பல சுவைகளில் புரதச் சத்து மிக்க பால் மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

புதுவை அரசு நிறுவனமான பாண்லே பாலின் தரம் குறித்து சிலா் தவறாக பிரசாரம் செய்து வருகின்றனா். பாலில் கலப்படம் இருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் கந்தசாமி.

முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியா் சிவக்குமாா் வரவேற்றாா். பள்ளித் துணை ஆய்வாளா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

SCROLL FOR NEXT