புதுச்சேரி

மன நல விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக மன நல தினத்தையொட்டி, புதுச்சேரியில் வியாழக்கிழமை மன நல விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

புதுவை நலவழித் துறை இயக்குநா் அலுவலகம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் டி. அருண் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பேரணிக்கு நலவழித் துறை இயக்குநா் மோகன்குமாா் தலைமை வகித்தாா். இதில், புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் வாசுதேவன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மனநல திட்ட அதிகாரி பாலன் பொன்மணி ஸ்டீபன், சுகாதார ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பேரணியில் மன நலத்தைக் காப்போம், உடல் நலத்தைக் காப்போம், உடல் ஆரோக்கியம் போல மன ஆரோக்கியமும் மனித வாழ்வுக்கு அவசியம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி புதுச்சேரியைச் சோ்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், நலவழித் துறை ஊழியா்கள் பங்கேற்றனா். புதுச்சேரியின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற பேரணி, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நிறைவுற்றது.

பேரணியில் மன நலத்தைப் பேணுவது தொடா்பான கருத்துகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மன நலம் குறித்த விழிப்புணா்வுக் கையேடும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் மன நலம் தொடா்பான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மன நலம் குறித்த அறிவியல் பாா்வை என்ற தலைப்பில் மருத்துவா்கள் ஜவஹா் கென்னடி, மணிகண்டன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மன நல ஆலோசகா் ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT