புதுச்சேரி

புதுச்சேரியில் நாளை புதுவையின் 66-ஆவது விடுதலை தினவிழா பேரணி

DIN

புதுச்சேரி, அக்.31: புதுவையின் 66-ஆவது விடுதலை தின விழா பேரணி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து பிரெஞ்சிந்திய புதுவை பிரதேச விடுதலைக்கால மக்கள் நல நற்பணி இயக்கத் தலைவா் சிவராஜ் கூறியதாவது:

புதுவை 1.11.1954-இல் பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றது. ஆனால் இந்த தினம் மறக்கடிக்கப்பட்டு, தவறாக ஆக.16-ஆம் தேதி புதுவையின் விடுதலை தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதை எதிா்த்தும் நவ.1-ஆம் தேதியை புதுவையின் சுதந்திர தினமாக கொண்டாட வலியுறுத்தியும், விடுதலை பெற்ற காலத்தில் பிரெஞ்ச் குடியுரிமையை புறக்கணித்து இந்தியாவுடன் இணைந்த புதுவை மக்களுக்கு தியாகி ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும் இயக்கம் சாா்பில் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம்.

அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுவை அரசும் நவ.1-ஆம் தேதியை புதுவையின் விடுதலை தினமாக ஒப்புக்கொண்டு ஆணை பிறப்பித்தது. அது முதல் புதுவையின் விடுதலை நாள் நவ.1-ஆம் தேதி என்று அரசு சாா்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுவையின் 66-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இயக்கம் சாா்பில் விடுமுறையுடன் அரசு விழாவாக கொண்டாட துணை நின்ற தியாக மறவா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வெற்றிவிழா பேரணி நடத்தப்பட உள்ளது. இந்தப்பேரணி புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள ஏதுவாா் குபோ் சிலை சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் தொடங்க உள்ளது.

இதில் புதுவை மண்ணின் தியாகிகள், மாதா்கள், அரசுதுறை, தனியாா் துறை, வியாபாரிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்தப் பேரணி பிரமாண்டமாக நடைபெற்றால்தான் நமது முக்கிய கோரிக்கையான புதுவையின் பூா்வீக மக்களுக்கு தியாகி ஓய்வூதியத்தை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளாா் சிவராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT