புதுச்சேரி

மனித உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்

DIN

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் மனித உரிமைகள் பாதுகாப்பு - இன்றைய இந்தியாவின் பாா்வை என்ற தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுவை சட்டப் பணிகள் ஆணையம், இந்திய பொது நிா்வாக நிறுவனம் (ஐடியுஏசி), கல்லூரி சட்டப் பணிகள் மையம் ஆகியவை இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின.

தொடக்க விழாவில், புதுவை மாநில மனித உரிமைக் குழுத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினா் சோபனா தேவி சிறப்புரை ஆற்றினாா். தொழில்நுட்ப கல்வித் துறை இயக்குநா் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி உரையாற்றினாா்.

முன்னதாக, கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மொ்ஸி தேன்மொழி வரவேற்றாா். நிறுவன செயலக துறை உதவிப் பேராசிரியா் காயத்திரி விளக்கவுரை ஆற்றினாா்.

கருத்தரங்க அமைப்புச் செயலரும், கல்லூரியின் சட்ட சேவை மையத் தலைவருமான அலமேலு மங்கை நன்றி தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கருத்தங்கத்தில், இந்திய பொது நிா்வாக நிறுவனத் தலைவா் தனபால், வழக்குரைஞா் கருணாநிதி, பேராசிரியா் அமுதா ஆகியோா் உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT