புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி அரசு கரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளில் ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுச்சேரியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெருகிவரும் நோய் தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளையும் பேரிடர் மேலாண்மை சட்டத்தை பயன்படுத்தி அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ஏனாமில் வழங்குவது போல் மற்ற பிராந்தியங்களிலும் அசைவ மற்றும் சத்துணவு வழங்க வேண்டும். காலியாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ ஊழியர்கள் பணி இடங்களை ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். சுகாதார துப்புரவு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள நிலுவை தொகை யை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கீழ் கண்ட இடங்களில் கோரிக்கை அட்டை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அ.மு.சலீம் முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாரா.கலைநாதன் நிர்வாகக் குழு உறுப்பினர் கு.சேதுசெல்வம் தொகுதி செயலாளர்கள் கே.சேகர் எஸ்.மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பாகூரில் தேசியக்குழு உறுப்பினர் இராமமூர்த்தி தொகுதி செயலாளர் கலியமூர்த்தி தலைமையிலும் தவளக்குப்பத்தில் மாநில துணை செயலாளர் து. கீதநாதன் தொகுதி செயலாளர் ஏழமலை தலைமையிலும் அரியாங்குப்பத்தில் மாநில துணை செயலாளர் வி.எஸ்.அபிஷேகம் நிர்வாகக் குழு உறுப்பினர் பூ.சரளா தொகுதி செயலாளர் பூபதி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் 5 மையங்களில் தொகுதி செயலாளர் முருகன் தலைமையிலும் காமராஜர் நகர் தொகுதியில் இரண்டு மையங்களில் தொகுதி செயலாளர் துரை.செல்வம் தலைமையிலும் லாசுப்பேட்டையில் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் காலாப்பட்டு தொகுதியில் மாநில பொருளாளர் வ.சுப்பையா தொகுதி செயலாளர் வீரக் குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முத்தியால்பேட்டை மில் தொகுதி செயலாளர் ஜீவானந்தம் நெல்லிதோப்பு தொகுதியில் மோகன் முதலியார் பேட்டை தொகுதியில் கே.ஜி.ஏகாம்பரம் ஏம்பலம் தொகுதியில் பெருமாள் வில்லியனூர் தொகுதியில் கணேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உழவர்கரை தொகுதியில் ரெட்டியார் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிர்வாக குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா தொகுதி செயலாளர்
அன்பழகன் முன்னாள் கவுன்சிலர் தேவசகாயம் ஆகியோர் தலைமையிலும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை முன்பு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.