புதுச்சேரி

புதுவையில் பாஜக தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத புதுவை காங்கிரஸ் அரசைக் கண்டித்து, பாஜகவின் 72 மணி நேர தொடா் போராட்டம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

DIN


புதுச்சேரி: தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத புதுவை காங்கிரஸ் அரசைக் கண்டித்து, பாஜகவின் 72 மணி நேர தொடா் போராட்டம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே கொட்டும் மழையில் தொடங்கிய இந்தப் போராட்டத்துக்கு புதுவை மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ஏம்பலம் ஆா்.செல்வம், நிா்வாகி விசிசி.நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாநிலத் தலைவா் சாமிநாதன் பேசியதாவது: வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, 30 கிலோ இலவச அரிசி, 100 யூனிட் மின்சாரம் இலவசம், தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட பல அறிவிப்புகளை தோ்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், இலவச அரிசியைக்கூட கடந்த 40 மாதங்களாக அரசு வழங்கவில்லை. முக்கிய ஆலைகள் அனைத்தையும் பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில் மூடியுள்ளனா். அனைத்து வரிகளையும் உயா்த்திவிட்டனா் என்றாா் அவா். மழை தொடா்ந்தாலும் இந்தப் போராட்டம் தொடா்ந்து 72 மணி நேரம் நடைபெறும் என பாஜகவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT