முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் மத்திய குழு ஆய்வு

புதுச்சேரியில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழு.
பகிர்:

புதுச்சேரியில் 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசின் இணைச்செயலர் அசு தோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான மத்திய குழு இன்று ஆய்வு செய்து வருகின்றனர். 

முதலாவதாக தலைமை செயலகத்தில் புதுச்சேரி அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய குழுவினர், புதுச்சேரி நகரப்பகுதியில் இருந்து புறப்பட்டு பத்துக்கண்ணு, வழுதாவூர் சாலையில் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். 

தொடர்ந்து ராமநாதபுரம், சந்தைபுதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை உள்ளிட்ட பயிர் சேதங்களையும் ஆய்வு செய்கின்றனர்.

ஆய்வை முடித்துக்கொண்டு தலைமை செயலகம் வரும் மத்திய குழு, அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, கடலூருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இக்குழுவில் மத்திய வேளாண்துறை இயக்குநர் மனோகரன், மீன்வளத்துறை ஆணையர் பால் பாண்டியன், சாலைப் போக்குவரத்துத்துறை மண்டல அலுவலர் ரணஞ்சய் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →