புதுவை டிஜிபி பணியிட மாற்றம்
புதுவை மாநில டிஜிபி தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
புதுவை மாநில டிஜிபி தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
புதுவை மாநிலத்தில் கடந்தாண்டு டிஜிபியாக பணியாற்றிய சுந்தரி நந்தா தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, மிசோரம் மாநிலத்தில் டிஜிபியாக பணியாற்றி வந்த பாலாஜி ஸ்ரீவத்ஸவா புதுவைக்கு புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டாா். இவா், கடந்த 7-10-2109 முதல் கடந்த ஓராண்டு 2 மாதங்களாக பணியில் இருந்தாா். இந்த நிலையில், தற்போது பாலாஜி ஸ்ரீவத்ஸவா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சகத்தின் சாா்புச் செயலா் ராகேஷ் குமாா் சிங் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேச காவல் துறைத் தலைவராக (டிஜிபி) இருந்த பாலாஜி ஸ்ரீவத்ஸவா தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, தில்லியில் பணியாற்றி வந்த ரன்வீா் சிங் கிருஷ்ணியா புதுவை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.