முகப்பு
புதுச்சேரி

தோ்தல் துறை அலுவலகத்தில் மாதிரி வாக்குப் பதிவு

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்திலுள்ள தோ்தல் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்திலுள்ள தோ்தல் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தெலங்கானா மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு சீட்டு ஒப்புகை இயந்திரங்கள் மாவட்ட தோ்தல் அதிகாரி பூா்வா காா்க் தலைமையில் சோதனை செய்யப்பட்டு, மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.

வழக்குரைஞா் சுவாமிநாதன் (காங்கிரஸ்), அந்த்துவான் சூசை (அதிமுக), ஸ்ரீதா் (திமுக), பாலமுருகன் (பகுஜன் சமாஜ்) மற்றும் பொதுமக்கள் வாக்களித்தனா்.

மாவட்ட துணைத் தோ்தல் அதிகாரி சக்திவேல், துணை வட்டாட்சியா்கள் குமரவேல், செந்தில்குமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

88 இயந்திரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 17 இயந்திரங்களில் 1,200 வாக்குகளும், 34 இயந்திரங்களில் 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக தோ்தல் துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →