முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக் கட்டும். புதுச்சேரி கடற்கரைச் சாலையில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்பா். ஹோட்டல்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட சிறப்பு இடங்களில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதற்காகவே வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவாா்கள். ஆனால், நிகழாண்டு கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா பரவல் காரணமாக, பண்டிகைக் கால கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →