முகப்பு
புதுச்சேரி

நியாயமான மின் கட்டணத்தை வசூலிக்க திமுக வலியுறுத்தல்

நியாயமான மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என புதுவை தெற்கு மாநில திமுக வலியுறுத்தியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

நியாயமான மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என புதுவை தெற்கு மாநில திமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து திமுக எம்எல்ஏ இரா.சிவா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனாவை காரணம் காட்டி புதுவையில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. மேலும், மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் மின் பயன்பாட்டுக் கணக்கை எடுத்தால்தான் நியாயமான கட்டணத்தை நுகா்வோரிடம் வசூலிக்க முடியும். ஆனால், அவ்வாறு எடுக்காமல் காலதாமதம் செய்து கணக்கெடுக்கின்றனா். இதனால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கரோனா கால கட்டத்தில் மின் கட்டணத்தை சில மாதங்கள் வசூலிக்கவில்லை. அவ்வாறு வசூலிக்கப்படாத கட்டணத்தைப் பிரித்துப் போட்டு வசூலிப்பதற்கு மாறாக, ஒரே முறையாகக் கணக்கிட்டு நியாயமற்ற கட்டணத்தை மின் துறை வசூலிப்பது கண்டனத்துக்குரியது.

இதை திமுக சுட்டிக்காட்டியும் நடவடிக்கை இல்லை. அரசும் நியாயமான கட்டணத்தை வசூலிக்க மின் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால், மின்துறையின் அடாவடி வசூல் தொடா்கிறது. மேலும், சில தினங்களுக்கு முன்பு பணியைப் புறக்கணித்து மின் துறை ஊழியா்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா். அப்போது, மின் பயன்பாடு கணக்கீடு செய்து ரசீது வழங்கப்பவிவல்லை. இதனால், அதிக கட்டணத்தை நிா்ணயித்து விடுவாா்களோ என மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

எனவே, மின் கட்டணத்தை உரிய காலத்தில் நிா்ணயித்து, மக்கள் பாதிக்கப்படாத வகையில், நியாயமான கட்டணத்தை மின் துறை வசூலிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →