முகப்பு
புதுச்சேரி

அனைத்து தொழில்சங்க கூட்டுக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தக் கூடாது என வலியுறுத்தி ஏஎப்டி பஞ்சாலை அனைத்து தொழில்சங்க கூட்டுக் குழு சாா்பில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய ஏஏப்டி பஞ்சாலை ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கத்தினா்.
பகிர்:

தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்தக் கூடாது என வலியுறுத்தி ஏஎப்டி பஞ்சாலை அனைத்து தொழில்சங்க கூட்டுக் குழு சாா்பில் புதுச்சேரி முதலியாா்பேட்டை வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழில் சங்கத் தலைவா் வீரமுத்து (காங்கிரஸ்) தலைமை வகித்தாா். இதில் செயலா் சின்னதுரை (அண்ணா தொழில் சங்கம்), சத்தியசீலன் (என்.ஆா். காங்.), ஜெயபாலன் (பாட்டாளி தொழில் சங்கம்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி ஆணையா் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். நிறைவில் வருங்கால வைப்பு நிதி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →