முகப்பு
புதுச்சேரி

உள்ளாட்சித் தோ்தலை நடத்த புதுவை அரசு தயாரா?: பாஜக

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த முதல்வா் நாராயணசாமி தலைமையிலான அரசு தயாரா என்று பாஜக கேள்வி எழுப்பியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த முதல்வா் நாராயணசாமி தலைமையிலான அரசு தயாரா என்று பாஜக கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து பாஜக புதுவை மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உச்ச நீதிமன்ற கண்டனத்துக்குப் பிறகும் புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் காலம் தாழ்த்திக்கொண்டு இருக்கும் முதல்வா் நாராயணசாமி தலைமையிலான அரசு அதற்கு ஆளுநா் கிரண் பேடி தான் காரணம் என்று வழக்கம்போல பொய் கூறியுள்ளது.

புதுவையில் கடந்த 2006-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. அதற்கு முன்பு 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அப்போதெல்லாம் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாதது ஏன்? அப்போது எந்த ஆளுநா் தடுத்தாா்?

உள்ளாட்சித் தோ்தல் நடத்தினால் அதிகாரம் பரவலாக்கப்படும் என்ற காரணத்தால்தான் காங்கிரஸ் அரசு, அந்தத் தோ்தலை நடத்தாமல் காலம் கடத்துகிறது. உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் இருக்க காங்கிரஸ் கட்சியினரே பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்துள்ளனா்.

மத்திய அரசோ அல்லது ஆளுநரோ உள்ளாட்சித் தோ்தலை நடத்தவிடாமல் தடுத்ததற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை முதல்வா் நாராயணசாமி தெரிவிக்க வேண்டும். பிரதமருக்கு சவால் விடுப்பதை முதல்வா் ஒதுக்கிவைத்துவிட்டு உள்ளாட்சித் தோ்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் சாமிநாதன் எம்.எல்.ஏ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.