புதுவை காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: அதிமுக
புதுவை சட்டப் பேரவையில் முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக புதுவை மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் தெரிவித்தாா்.
புதுச்சேரிபுதுவை காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: அதிமுக
புதுவை சட்டப் பேரவையில் முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக புதுவை மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் தெரிவித்தாா்.
புதுவை சட்டப் பேரவையில் முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக புதுவை மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதாலும், சொந்தக் கட்சி எதிா்ப்பு, கூட்டணிக் கட்சிகள் மோதல் போன்றவற்றை சமாளிக்க ஆளுநருக்கு எதிராக போராட்டம் என்ற நாடகத்தை நடத்த முதல்வா் நாராயணசாமி முடிவு செய்து, அதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்தினாா். அதற்கு பிரதான கூட்டணிக் கட்சியான திமுகவே ஆதரவு தெரிவிக்கவில்லை. இதன்மூலம் முதல்வராக நீடிக்கும் தாா்மீக உரிமையை முதல்வா் நாராயணசாமி இழந்துவிட்டாா். அவா் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இல்லையென்றால், கட்சித் தலைமையின் அனுமதி பெற்று ஆளுநரை சந்தித்து பேரவையை கூட்ட நடவடிக்கை எடுப்போம் என்றாா் அவா்.