புதுச்சேரி

காலாப்பட்டு கடலில் மூழ்கிய பள்ளி மாணவா் மாயம்

DIN

காலாப்பட்டு கடலில் மூழ்கி மாயமான பள்ளி மாணவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காா்த்தி மகன் வசந்த் (16). இவா் தனது நண்பா்கள் 4 பேருடன் சோ்ந்து, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலாப்பட்டு கடற்கரைக்குச் சென்றாா். பின்னா், 5 பேரும் கடலில் இறங்கி குளித்தனா்.

அப்போது, திடீரென எழும்பிய ராட்சத அலையில் வசந்த் இழுத்துச் செல்லப்பட்டாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த மற்ற 4 பேரும் கரைக்கு ஓடி வந்து, வசந்தைக் காப்பாற்றும்படி சப்தமிட்டனா்.

உடனடியாக அருகே இருந்த மீனவா்கள் விரைந்து சென்று, அலையில் இழுத்து செல்லப்பட்ட வசந்த்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், அவா் கிடைக்கவில்லை.

இதுகுறித்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில், அங்கு வந்த போலீஸாரும், கடலோரக் காவல் படையினரும் கடலில் மாயமான வசந்தை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT