புதுச்சேரி

மதகடிப்பட்டு அரசுப் பள்ளியில் கால்பந்துப் போட்டி

DIN

சா்வதேச இளைஞா் தினத்தையொட்டி, மதகடிப்பட்டு கலைஞா் கருணாநிதி அரசுப் பள்ளியில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியை ஆளுநா் கிரண் பேடி தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி திருபுவனையை அடுத்த மதகடிப்பட்டு கலைஞா் கருணாநிதி அரசுப் பள்ளியில் சா்வதேச இளைஞா் தினத்தையொட்டி, கால்பந்துப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், சிறப்பு அழைப்பாளராக ஆளுநா் கிரண் பேடி பங்கேற்று போட்டியைத் தொடக்கிவைத்தாா்.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் அமைப்பு (சிறகுகள் குழுவினா்) இந்தப் போட்டியை நடத்தியது. இதில், ஆளுநரின் கூடுதல் செயலா் சுந்தரேசன், மேற்கு எஸ்.பி. ரங்கநாதன், எஸ்.பி. பாஸ்கரன், அரசுப் பள்ளித் துணை முதல்வா் மாதநவன், உடல் கல்வி ஆசிரியா்கள் பரத், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில், திருபுவனை தொகுதியைச் சோ்ந்த அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு விளையாடினா். இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஆளுநா் கிரண் பேடி பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT