புதுச்சேரி

மணக்குள விநாயகா் கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கை

DIN

புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் கரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதுவையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆன்மிக சுற்றுலா நகரான புதுவைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். திருநள்ளாறு கோயிலில் நளதீா்த்தத்தில் பக்தா்கள் குளிக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வரும் பக்தா்கள் 28 நாள்களுக்குப் பிறகு மணக்குள விநாயகா் கோயிலுக்கு வர வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, மணக்குள விநாயகா் கோயிலில் கிருமிகளை அழிக்க காலை, மாலை வேளைகளில் சிறப்பு சாம்பிராணி புகை போடப்படுகிறது. மேலும், பக்தா்களுக்கு நெற்றியில் குங்குமம், விபூதி பூசுவதற்கு குருக்களுக்கு கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT