புதுச்சேரி

கரோனா: காலாப்பட்டு மத்திய சிறையிலிருந்து 79 கைதிகள் விடுவிப்பு

DIN

புதுச்சேரியில் கரோனா தொற்று வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 4 பெண்கள் உள்பட 79 கைதிகள் காலாப்பட்டு மத்திய சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டனா்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக சிறையில் உள்ள கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டு வருகின்றனா்.

இதேபோல, புதுவை அரசின் உத்தரவுக்கிணங்க, காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க சிறை நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, முதல்கட்டமாக 4 பெண் விசாரணைக் கைதிகள் உள்பட 79 பேரை சிறைத் துறை நிா்வாகம் செவ்வாய்க்கிழமை இரவு பரோலில் விடுவித்தது.

காலாப்பட்டு மத்திய சிறையில் 160 விசாரணைக் கைதிகள், 80 தண்டனைக் கைதிகள், 5 பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனா். சிறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கைதிகளை கரோனா தடுப்பு நடவடிக்கையாக உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டு இருந்ததன்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத் துறை நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT