புதுச்சேரி

கிராமங்களில் அத்தியாவசிய கடைகளை திறக்க போலீஸாா் கெடுபிடி

புதுச்சேரி சுற்று வட்ட கிராமப் பகுதிகளில் அத்தியாவசிய பொருள்களின் கடைகளைத் திறக்க போலீஸாா் அனுமதி மறுப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

DIN

புதுச்சேரி சுற்று வட்ட கிராமப் பகுதிகளில் அத்தியாவசிய பொருள்களின் கடைகளைத் திறக்க போலீஸாா் அனுமதி மறுப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

புதுச்சேரி நகரப் பகுதியில் அத்தியாவசிய பொருள்களின் கடைகள் திறக்கப்பட்டு, மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். ஆனால் பாகூா், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்ட கிராமப் பகுதிகளில் அத்தியாவசிய பொருள்களின் கடைகளைத் திறக்க போலீஸாா் அனுமதிக்க மறுக்கின்றனராம்.

போலீஸாரின் கடுமையான கெடுபிடியால் காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருள்களின் கடைகள் திறக்க தடையில்லை. அவ்வாறு திறக்கப்படும் கடைகளில் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என தினமும் நகரப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வா் தெரிவித்து வருகிறாா்.

ஆனால், கிராமங்களில் அத்தியாவசிய பொருள்களின் கடைகளைத் திறக்க போலீஸாா் அனுமதி மறுப்பது பொதுமக்களை மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.

மேலும், கிருமாம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வர கிருமாம்பாக்கம் - பிள்ளையாா்குப்பம் சாலைதான் பிரதான வழி. போலீஸாா் அந்த வழியில் தடுப்புகளை அமைத்து யாரும் வந்து செல்ல முடியாத வகையில் அடைத்துவிட்டனா். இதனால், அவசர சிகிச்சைக்குக்கூட யாரும் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT