புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 73 பேருக்கு கரோனா; 600ஐ கடந்த இறப்பு எண்ணிக்கை

DIN

புதுச்சேரியில் இன்று புதிதாக 73 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல், ‘‘புதுச்சேரியில் 3 ஆயிரத்து 981 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-58, காரைக்கால்-2, ஏனாம்-2, மாஹே-11 என மொத்தம் 73 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 601 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 35 ஆயிரத்து 744 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் வீடுகளில் புதுச்சேரியில் 543 பேர், காரைக்காலில் 138 பேர், ஏனாமில் 43 பேர்,  மாஹேவில் 59 பேர் என 783 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரியில் 274 பேர், காரைக்காலில் 47 பேர், ஏனாமில் 27 பேர், மாஹேவில் 81 பேர் என 429 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 1,212 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இன்று ஒரே நாளில் புதுச்சேரியில் 472 பேர், காரைக்காலில் 8 பேர், ஏனாமில் 11 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 494 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 931 (94.93 சதவீதம்) அதிகரித்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 33 ஆயிரத்து 733 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 192 பரிசோதனைகள் ‘தொற்று இல்லை’ என்று முடிவு வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT