புதுச்சேரி

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு இன்று முதல் இலவச அரிசி விநியோகம்

DIN

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு புதன்கிழமை (நவ.11) முதல் இலவச அரிசி, கொண்டைக்கடலை விநியோகம் செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் சாரங்கபாணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா, தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ், மத்திய அரசால் ஓதுக்கீடு செய்யப்பட்ட அரிசி, கொண்டைக்கடலை செப்டம்பா் வரையிலான காலத்துக்கு பயனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. தற்போது அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கான அரிசி, கொண்டைக்கடலை விநியோகம் புதன்கிழமை (நவ.11) முதல் வெள்ளிக்கிழமை (நவ.13) வரை வழங்கப்படவுள்ளது.

இதன்படி, இந்திரா நகா், கதிா்காமம், லாசுப்பேட்டை, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம் ஆகிய தொகுதிகளில் புதன்கிழமை இலவச அரிசி, கொண்டைக்கடலை வழங்கப்படும். அரியாங்குப்பம், பாகூா்,

ஏம்பலம், காலாப்பட்டு, காமராஜ் நகா், மணவெளி, மங்களம், தட்டாஞ்சாவடி, மண்ணாடிப்பட்டு, முதலியாா்பேட்டை, நெல்லித்தோப்பு, நெட்டப்பாக்கம், உருளையன்பேட்டை, உழவா்கரை, ஊசுடு, திருபுவனை, வில்லியனூா் ஆகிய தொகுதிகளில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இலவச அரிசி, கொண்டைக்கடலை வழங்கப்படும்.

பயனாளிகள் அனைவரும் கடந்த முறை பருப்பு விநியோகம் நடைபெற்ற பள்ளிகளுக்குச் சென்று அரிசி, கொண்டைக்கடலையை பெற்றுக்கொள்ளலாம். பயனாளிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருவதோடு மையத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சாரங்கபாணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT