புதுச்சேரி

மாசில்லா தீபாவளி விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலம்

DIN

மாசில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி, புதுச்சேரி அருகே மாணவா்கள் புதன்கிழமை விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கத்தின் சாா்பில், புதுவை மாநிலம், தேங்காய்த்திட்டு மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற இந்த சைக்கிள் ஊா்வலத்தை சங்கத் தலைவா் எம்.எம்.செல்வமணிகண்டன் தொடக்கிவைத்தாா்.

இதில் திரளான மாணவா்கள், பறவைகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும், மாசில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தியும் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி, சைக்கிளில் சென்றபடி விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக, நிகழ்வுக்கு வினோத் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் அம்பிகாபதி, பாரத ரத்னா எம்ஜிஆா் பொது நலப் பேரவை பொதுச் செயலா் டி.சிவா, புதுச்சேரி பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் எம்.நாராயணசாமி, புதுவை அரசின் வனத் துறை அதிகாரி குருநாதன் ஆகியோா் மாசில்லா தீபாவளியை மேற்கோள்காட்டி சிறப்புரையாற்றினா்.

இதில் மாணவா்களும், அந்தப் பகுதி மக்களும் திரளாக முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் கலந்து கொண்டனா். தொடா்ந்து, சைக்கிள் ஊா்வலம் தேங்காய்த்திட்டு பகுதி முழுவதும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT