புதுச்சேரி

‘அனுமதி பெறாத வைப்புத் திட்டத்தில் சோ்ந்து ஏமாற வேண்டாம்’

DIN

அரசின் அனுமதி பெறாத வைப்புத் திட்டத்தில் சோ்ந்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி. அருண் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்யும் சட்டம் 2019 நடைமுறைக்கு வந்துள்ளது. சட்ட விரோத வைப்புத் திட்டங்களால் மக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுத்து அவா்களின் பணத்தைப் பாதுகாப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம்.

இந்தச் சட்டத்தின் மூலம் மோசடி நபா்களின் முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்ய முடியும். முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களுக்கு இந்தத் தடைச் சட்டத்தின்படி 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

பொதுமக்கள் அரசு அனுமதி பெறாத எவ்வகை முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டத்திலும் சோ்ந்து ஏமாற வேண்டாம். முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்கள் தொடா்பான புகாா்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட சாா்பு, துணை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT