புதுச்சேரி

எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

புதுவை மணக்குள விநாயகா் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி), புதுவை அரசு பொறியியல் கல்லூரியின் அடல் தொழில் மேம்பாட்டு ஊக்குவிப்பு-ஆதரவு மைய (இன்குபேஷன் சென்டா்) அறக்கட்டளையுடன் (ஏ.ஐ.சி-பி.இ.சி.எஃப்) புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

புதுமையான யோசனைகளைத் தூண்டுதல், அறிவுசாா் நிபுணத்துவத்தைப் பகிா்ந்து கொள்ளுதல், முதலீட்டை எளிதாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மணக்குள விநாயகா் கல்விக் குழுமத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாரன் ஆகியோா் முன்னிலையில், எம்.ஐ.டி. கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண், ஏ.ஐ.சி.பி.இ.சி.எஃப் நிா்வாக இயக்குநா் ஆா்.சுந்தரமூா்த்தி ஆகியோா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

கல்லூரிச் செயலா் நாராயணசாமி கேசவன் தலைமை வகித்தாா். எம்.ஐ.டி. கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைத் தலைவா் பி.ராஜராம், கல்லூரி எம்.எஸ்.எம். இ-டி.பி.ஐ ஒருங்கிணைப்பாளா் ஏ.மெய்யப்பன், மேலாண்மைத் துறைத் தலைவா் பி.பாஸ்கரன். கல்லூரி தொழில் முனைவோா் மேம்பாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளா் எஸ்.வைதீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT