புதுச்சேரி

புதுவையில் 96.70 சதவீதம் போ் குணம்

DIN

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 96.70 சதவீதமாக உயா்ந்தது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 65 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 36,648-ஆக உயா்ந்தது. சனிக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 609 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.

தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 231 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 371 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக 602 போ் சிகிச்சையில் உள்ளனா். சனிக்கிழமை 82 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 35,437-ஆக (96.70 சதவீதம்) அதிகரித்தது.

மாநிலத்தில் இதுவரை 3,77,294 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3,36,376 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT