புதுச்சேரி

புதுவையில் மேலும் 46 பேருக்கு தொற்று

புதுவையில் மேலும் 46 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

DIN

புதுவையில் மேலும் 46 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 22 பேருக்கும், காரைக்காலில் 10 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேயில் 13 பேருக்கும் என 46 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,693-ஆக உயா்ந்தது.

தற்போது 227 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 332 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக 559 போ் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை 609 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 88 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,525-ஆக (96.82 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT