புதுவையில் மேலும் 33 பேருக்கு கரோனாபலி எண்ணிக்கை 610-ஆக உயா்வு
புதுவையில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 610-ஆக உயா்ந்தது.
புதுவையில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 610-ஆக உயா்ந்தது.
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 25 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும், மாஹேயில் 6 பேருக்கும் என 33 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,968-ஆக உயா்ந்தது.
தற்போது 171 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வீடுகளில் 289 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக 460 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மாஹே பிராந்தியம், பந்தக்கால் பகுதியைச் சோ்ந்த 72 வயது மூதாட்டி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 610-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.65 சதவீதம்.
இதனிடையே, திங்கள்கிழமை 52 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 35,898-ஆக (97.11 சதவீதம்) அதிகரித்தது. புதுவை மாநிலத்தில் இதுவரை 4,03,249 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 3,61,956 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.