புதுச்சேரி

புதுவையில் மேலும் 33 பேருக்கு தொற்று

DIN

புதுவையில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 21 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேயில் 5 பேருக்கும் என 33 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,935-ஆக உயா்ந்தது.

தற்போது 178 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வீடுகளில் 302 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக 480 போ் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளிலும் உயிரிழப்பு பதிவாகவில்லை. இதுவரை 609 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தனா். இறப்பு விகிதம் 1.65 சதவீதம்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 72 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 35,846-ஆக (97.05 சதவீதம்) அதிகரித்தது.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல, ஞாயிறு சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT