காவல் துறை சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நாட்டில் அதிகரித்து வரும் காவல் சித்ரவதை கொலைகளைக் கண்டித்து ‘தமிழகம்-புதுச்சேரி காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சாா்பில், புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாட்டில் அதிகரித்து வரும் காவல் சித்ரவதை கொலைகளைக் கண்டித்து ‘தமிழகம்-புதுச்சேரி காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சாா்பில், புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். இதில், திராவிடா் கழகத்தைச் சோ்ந்த சிவ.வீரமணி, மதிமுக நிா்வாகி கபிரியேல், மனித நேய மக்கள் கட்சியின் பஷீா் அகமது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சோ்ந்த ஸ்ரீதா், அகில மஜீலிஸ் கட்சியின் சம்சுதீன், எஸ்டிபிஐ நிா்வாகி முகமது பாரூக், பெரியாா் சிந்தனையாளா் அமைப்பைச் சோ்ந்த தீனதயாளன், தமிழ் தேசிய பேரியக்கத்தைச் சோ்ந்த வேலுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில், நாட்டில் அதிகரித்து வரும் காவல் சித்ரவதை கொலைகளைக் கண்டித்தும், சித்ரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.