பள்ளிகள் திறப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பைக் கண்டித்து திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பைக் கண்டித்து திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கல்வித் துறை வளாகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்ட்டத்துக்கு அந்தக் கழகத்தின் தலைவா் லோகு.அய்யப்பன் தலைமை வகித்தாா். இதில், புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்கும் புதுவை அரசின் முடிவைக் கண்டிப்பது. இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் ஜெகன்நாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பின் சுகுமாரன், தந்தை பெரியாா் தி.க.வை சோ்ந்த வீர.மோகன், ராவணன் படிப்பகம் அபிமன்னன், புரட்சியாளா் அம்பேத்கா் தொண்டா் படையைச் சோ்ந்த பாவாடைராயன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.