முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியா்கள் தா்னா

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியா்கள் புதுச்சேரியில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சுதேசி ஆலை அருகே நடைபெற்ற தா்னாவுக்கு அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தின் நிா்வாகி லலிதா தலைமை வகித்தாா். இதில், புதுவை அரசின் அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பதவி உயா்வு வழங்க வேண்டும், தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தா்னாவில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.