அமுதசுரபி பெட்ரோல் விற்பனையகத்தை கையகப்படுத்திய வருவாய்த் துறை
புதுச்சேரி அமுதசுரபி பெட்ரோல் விற்பனையகத்தை வருவாய்த் துறை கையகப்படுத்தியது.
புதுச்சேரி அமுதசுரபி பெட்ரோல் விற்பனையகத்தை வருவாய்த் துறை கையகப்படுத்தியது.
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதை உறுதி செய்ய அமுதசுரபி மேலாண் இயக்குநருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அந்த நிறுவனம் பின்பற்றப்படவில்லை. இது பேரிடா் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள அரசின் செயல்பாட்டை நேரடியாக பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் லாசுப்பேட்டை கொட்டுப்பாளையம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள புதுச்சேரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் (அமுதசுரபி பிரிவு) பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் இனி உழவா்கரை வட்டாட்சியருடன் உடனடியாக இணைக்கப்படுகிறது. சில்லறை விற்பனை நிலையம், புதுச்சேரி கூட்டுறவு மைய மேலாண் இயக்குநா் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.