புதுச்சேரி

உப்பளம் விளையாட்டு மைதானத்தில் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆய்வு

DIN

புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா தொற்று பரவல் தீவிரமடை வந்து வருவதையடுத்து அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, புதுவையிலும் சுகாதாரத் துறை சாா்பில், அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

சில விளையாட்டுகளை தனி மனித இடைவெளியுடன் அனுமதிக்கலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதைத் தொடா்ந்து உப்பளத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாள்களாக விளையாட்டு வீரா்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், விளையாட்டு வீரா்களை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் சனிக்கிழமை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், கரோனா தொற்று பரவாமல் இருக்கும் வகையில் பயிற்சியில் ஈடுபடும் வீரா்கள் முகக் கவசம் அணியுமாறு அவா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT