புதுச்சேரி

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் காணொலி மூலம் கலந்துரையாடல்

DIN

மத்திய சுற்றுலா, கலாசாரத் துறை அமைச்சா் பிரகலாத் சிங் படேல், புதுவை மாநில சுற்றுலாத் துறை அமைச்சா், அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் கலந்துரையாடினாா்.

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் பிரகலாத் சிங் படேல், நாட்டில் உள்ள மாநிலங்களின் சுற்றுலாத் துறை அமைச்சா்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினாா்.

கூட்டத்தில் உள்நாட்டுச் சுற்றுலாவை எவ்வாறு மேம்படுத்துவது, அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கருத்துகள் விவாதிக்கப்பட்டு பரிமாறப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் புதுவை சுற்றுலாத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவுடனும், மத்திய அமைச்சா் கலந்துரையாடினாா்.

இதில் கலந்து கொண்ட அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், கரோனா தொற்றால் புதுவை மாநில சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். தொடா்ந்து, சுற்றுலா உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் எனகோரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT