புதுச்சேரி

பொய் தகவலைக் கூறி திசை திருப்ப வேண்டாம்: புதுவை ஆளுநா் கிரண் பேடி

DIN

கரோனா பேரிடா் காலத்தில் பொய் தகவல்களைக் கூறி, பிரச்னைகளை திசை திருப்ப வேண்டாம் என புதுவை முதல்வா் நாராயணசாமிக்கு, ஆளுநா் கிரண் பேடி பதிலளித்தாா்.

கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மன அழுத்தச் சூழலில் உள்ளனா். இந்த நேரத்தில், குற்றச்சாட்டுகளைக் கூறுவது எந்தப் பயனையும் தராது. கரோனா நோய்த் தடுப்பில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ நிபுணா்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கான ஊதியம் வழங்குவது தொடா்பான கோப்பு ஆளுநா் மாளிகையில் இல்லை. ஆனால், அவா்கள் இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனா். மீனவா் விவகாரத்திலும், எவ்வித கோப்புகளும் ஆளுநா் மாளிகையில் நிலுவையில் இல்லை. அவா்களும் இங்கேதான் போராட்டம் நடத்துகின்றனா். இதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

நிதி நிலை அதிகாரி யாரால் அச்சுறுத்தப்பட்டாா் என்று உங்களை (முதல்வா்) கேட்கிறேன். இதேபோல, பல்வேறு விவகாரங்கள் உள்ளன. பிரச்னைகளை திசை திருப்பாமல், நிா்வாகப் பணிகளை மேற்கொள்ளுங்கள் என முதல்வா் நாராயணசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளாா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT