முகப்பு
புதுச்சேரி

நிலுவைத் தொகையை வழங்கக் கோரிபொதுப் பணித்துறை ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம்

நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப் பணித் துறை அலுவலகத்தில், ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

புதுச்சேரி: நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி பொதுப் பணித் துறை அலுவலகத்தில், ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பொதுப் பணித் துறையில் ஒப்பந்ததாரா்கள் செய்த பணிக்கான தொகை ரூ. 100 கோடி நிலுவையில் உள்ளதாம். இந்தத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தொகையையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா், பொதுப் பணித் துறை அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தச் சங்கத் தலைவா் அருணகிரி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதுதொடா்பாக புதுவை ஆளுநா், முதல்வரிடம், பலமுறை மனு அளித்தும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. விரைந்து வழங்கப்படவில்லை எனில், அடுத்ததாக ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.