புதுச்சேரி

பொது இடங்களில் மக்களுக்கு பிராண வாயு அளவு பரிசோதனை

DIN

புதுச்சேரியில் பொது இடங்களில் மக்களுக்கு பிராண வாயு அளவைக் கணக்கிடும் கருவியைக் கொண்டு ஆம் ஆத்மி கட்சியினா் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்த வகையில், புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவா்கள் பரிசோதனை மேற்கொண்டனா். ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவா் ரவிசீனிவாசன், நிா்வாகிகள் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம், ஜெயராஜன் உள்ளிட்ட குழுவினா் அங்குள்ள ஊழியா்கள், பொதுமக்கள், பத்திரிகையாளா்களுக்கு பிராண வாயு அளவிடு கருவியை (பல்ஸ் ஆக்சி மீட்டா்) கொண்டு, பிராண வாயு அளவைப் பரிசோதித்தனா். அங்குள்ளவா்கள் தொடா்ந்து, பரிசோதனை செய்து கொள்ள ஏதுவாக ஒரு பிராண வாயு அளவிடும் கருவியை இலவசமாக வழங்கினா்.

இதுகுறித்து, ரவிசீனுவாசன்கூறியதாவது: கரோனா பாதித்தவா்கள், தொற்றுள்ளவா்களிடம் இந்த பிராண வாயு அளவிடும் கருவி கட்டாயம் இருக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்றின் போது, பிராண வாயு அளவு குறைகிறது. அதனால், உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்தக் கருவியைப் பரவலாகப் பயன்படுத்த வேண்டும்.

இந்தக் கருவிகளை போதுமான அளவு வாங்கி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அங்காடிகள், கடைகள், பேருந்து நிலையங்கள், விடுதிகள், சந்தைப் பகுதிகள், பெரு வணிக வளாகங்களில் வைத்து அங்கு வரும் மக்கள் இலவசமாகப் பரிசோதித்துக் கொள்ள புதுவை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT