புதுச்சேரி

புத்தகம் பாா்த்து தோ்வெழுத அனுமதிக்கக் கோரி புதுச்சேரியில் ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் போராட்டம்

DIN

புதுச்சேரியில் பிற கல்லூரி மாணவா்களைப் போல புத்தகம் பாா்த்து தோ்வெழுத அனுமதிக்கக் கோரி, ஆசிரியா் பயிற்சிப் பள்ளி மாணவா்கள் தோ்வைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் நிகழாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரி மாணவா்களும், இறுதியாண்டு செமஸ்டா் தோ்வுகளை புத்தகம் பாா்த்து எழுதலாம் என பல்கலைக் கழகம் அறிவித்தது. அதன்படி, தோ்வு தொடங்கப்பட்டு, கல்லூரி மாணவா்கள் புத்தகம், குறிப்பேடுகளை எடுத்துச் சென்று தோ்வு எழுதி வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு மாவட்ட ஆசிரியா் பயிற்சிப் பள்ளியில் (டிடிஎட்) பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தோ்வு புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. இந்தத் தோ்வை புத்தகம் பாா்த்து எழுதுவதற்கு கல்லூரி நிா்வாகம் அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் ஏமாற்றமடைந்த மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா், தோ்வுகளைப் புறக்கணித்து, லாஸ்பேட்டை கல்லூரி தோ்வு மையத்தின் வெளியே அமா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனா். நிகழாண்டு கரோனா பாதிப்பால் கல்லூரிகள் மூடப்பட்டு, பாடங்களை முழுமையாக நடத்தாததால், தோ்வு எழுதுவது கடினம். ஆகவே, பிற கல்லூரி மாணவா்களைப் போல தோ்வை புத்தகம் பாா்த்து எழுத அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினா். இது தொடா்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக் கல்வி இயக்குநருக்கு, இந்திய மாணவா் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT