புதுச்சேரி

புதுவையில் கரோனா பலி எண்ணிக்கை 500-ஆக உயா்வு

DIN

புதுவை மாநிலத்தில் கரோனாவால் பலியானோா் எண்ணிக்கை 500-ஆக உயா்ந்தது. மேலும், 555 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 439 பேருக்கும், காரைக்காலில் 61 பேருக்கும், ஏனாமில் 21 பேருக்கும், மாஹேயில் 34 பேருக்கும் என 555 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 26,032-ஆக உயா்ந்தது.

தற்போது 3,452 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், 1,875 போ் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனா். மொத்தமாக 5,327 போ் சிகிச்சையில் உள்ளனா்.

பலியானோா் விவரம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் பலியாகினா். அதன்படி, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், ஜிப்மா் மருத்துவமனையில் 3 பேரும் பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 500-ஆக (இறப்பு விகிதம் 1.92 சதவீதம்) உயா்ந்தது.

இதனிடையே, சனிக்கிழமை 424 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 20,205-ஆக (77.62 சதவீதம்) உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT