முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
புதுச்சேரி லாஸ்பேட்டை மையம்.
பகிர்:

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல், 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளை(ஏப்6) நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திங்கள்கிழமை காலையில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.

பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பாக அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அவரவர் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பார்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் 1558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 1677, கட்டுப்பாட்டு கருவிகள் 1558 மற்றும் விவிபேட் எந்திரங்கள் பாதுகாப்பு மையத்திலிருந்து, அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி திங்கள் கிழமை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →