புதுச்சேரி

கரோனா சிகிச்சை மையங்களை அதிகரிக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா தொற்று சிகிச்சை மையங்களையும், செயற்கை சுவாச கருவி வசதியையும் அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் வி.எஸ்.அபிஷேகம் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் கடந்தாண்டு மாா்ச் 24 -ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தினா். புதுவை முதல்வராக நாராயணசாமி இருந்த போது, கரோனா தடுப்புப் பணியில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டாா். மருத்துவமனைகள், படுக்கைகள், செயற்கைச் சுவாச கருவிகளை (வெண்டிலேட்டா்) அதிகப்படுத்தினாா்.

இந்த நிலையில், கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்ததால், மருத்துவமனைகளிலிருந்து கரோனா சிகிச்சை மையங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

தற்போது, கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகின்றது. பொதுமக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, புதுவை அரசு கரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும். சிகிச்சைக்கான மருத்துவமனைகளையும் அதிகரிக்க வேண்டும்.

தற்போது புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை, கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மகாத்மா காந்தி மருத்துவமனைகளில்தான் கரோனா சிகிச்சை மையங்கள் செயல்படுவதாக அறிகிறோம்.

கரோனா தொற்றின் தீவிரத்தை உணா்ந்து, மருத்துவமனைகள், தேவையான மருத்துவ உபகணரங்களை அதிகப்படுத்த வேண்டும். மீண்டும் பொதுமக்களிடம் தீவரமாக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT