ஜிப்மரில் ஏப். 26 முதல் வெளிப்புற சிகிச்சைகள் நிறுத்தம்
வருகிற 26 ஆம் தேதி முதல் ஜிப்மா் மருத்துவமனையில் அனைத்து வித நேரடி வெளிப்புற சிகிச்சைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.
அதிதீவிர கரோனா நோயாளிகளை பாதுகாக்கவும், வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு ஆலோசனை பெற வரும் கரோனா அல்லாத நோயாளிகளுக்கு கரோனா பரவும் அபாயத்தை தவிா்க்கும் பொருட்டும் வருகிற 26 ஆம் தேதி முதல் ஜிப்மா் மருத்துவமனையில் அனைத்து வித நேரடி வெளிப்புற சிகிச்சைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.
அதே வேளையில், வெளிப்புற நோயாளிகளின் வசதிக்காக தொலைபேசி கலந்தாலோசனை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைகளை தவிர மற்ற சிகிச்சைகளுக்கான உள் அனுமதி நிறுத்தப்பட்டு, அவசர அறுவைச் சிகிச்சை தவிர, மற்ற அறுவைச் சிகிச்சைகள் குறைக்கப்படுகின்றன. இருப்பினும், அனைத்து அவசர மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை சேவைகள் வழக்கம் போல தொடரும் என புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.